வேலூர்: அருங்காட்சியகத்தில் 12 அடி உயர டைனோசர் பொம்மை

62பார்த்தது
வேலூர் மாநகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் தமிழக அரசின் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது ரூ. 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு அங்கமாக ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் 22 அடி நீளம், 12 அடி உயரம், 5. 1/2 அடி அகலத்தில் பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சியளிக்கும் பிரம்மாண்ட டைனோசர் பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

இது உண்மையான டைனோசர் போலவே ஒலி எழுப்பி சுவாசிப்பது, வால் மற்றும் கால்களை அசைக்கும் வகையில் மிக சுவாரஸ்யமாகவும் பார்ப்பவர்களை கவரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது வேலூர் கோட்டையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது. இதனை முறையாக நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி