கல்லூரி முடித்து வீடு திரும்பிய மாணவனை தாக்கிய மர்ம நபர்கள்

78பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலை கலை கல்லூரியில் கே. வி. குப்பம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மூன்றாம் ஆண்டு பி. காம் படித்து வருகிறார்.

இதனிடையே நேற்று (அக்.,2) மாலை கல்லூரி முடித்து தனியார் பேருந்தில் கே. வி. குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்றாம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென பேருந்துக்குள் ஏறிய சில வாலிபர்கள் கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கிவிட்டு கீழே இறங்கி தப்பிவிட்ட நிலையில் காயம் அடைந்த கல்லூரி மாணவன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து கல்லூரி மாணவன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி