கேக் சரி இல்லை என கேட்டதால் இருதரப்பினருக்கிடையே கை கலப்பு

80பார்த்தது
ஆம்பூர் அருகே கேக் கடையில் கேக் சரி இல்லை என கேட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம்
முற்றி கைகலப்பு.

கடை ஊழியரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் கூட்டுச்சாலை பகுதியில் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்வீட் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் முன்கூட்டியே பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து விட்டு சென்று சில மணி நேரம் கழித்து மீண்டும கேக் வாங்கி வர சென்ற போது கேக் சரியில்லை எனக்கூறி கடை ஊழியர் மற்றும் இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி ராஜ்குமார் மற்றும் பாண்டியன் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் தாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி