வேலூர்மாவட்டம் குடியாத்தம், தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டிய பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி வி. கோட்டா சாலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனம், சரக்குவாகனம், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை மறித்து ஊர்ந்து சென்று அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்றது.
வி கோட்டா சாலையில் திடீரென வந்த மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்த வாகன ஒட்டிகள் மலைப்பாம்பு செல்லும் வரை காத்திருந்து பின்னர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.