கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை: அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை: அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 13ம் ேததி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2, 669 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, அறநிலையத்துறை அமைச்சர்பி. கே. சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எம்பி சி. என். அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு. பெ. கிரி, பெ. சு. தி. சரவணன், எஸ்பி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார், கோயில் இணை ஆணையர் ஜோதி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா. ஸ்ரீதரன், நகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், பிரியாவிஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

வீடியோஸ்


திருவண்ணாமலை