ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட திராவிட கழகம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று அண்ணா சிலை அருகில் நடைபெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். திராவிட கழக மாவட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் திராவிட கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், திராவிட கழக காப்பாளர் பட்டாபிரபன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி