திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் கேண்டீனின் மின் இணைப்பை, நேற்று முன்தினம் கல்லூரி முதல்வர் துண்டித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில், மருத்துவக் கல்லூரி முதல்வரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும், நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி முதல்வரை சந்தித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதை நூற்றுக்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.