பாலத்தில் மாணவர்களை கட்டி இழுக்கும் ஊர் மக்கள்

75பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கோவிலுார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, சேரமத்துார் மற்றும் மேல் சேரமத்துார் கிராமங்களுக்கு இடையே செல்லும் சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர் அதில் சிக்கினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கயிறு கட்டி பாதுகாப்பாக மாணவ - மாணவியரை காப்பாற்றினர். மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர அங்கு பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி