துணை முதல்வர் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

80பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அனைத்துத் துறைகள் சாா்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி, சனி (ஆக்டோபா் 18, 19) ஆகிய தினங்களில் காா்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

மேலும், அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறாா். எனவே, அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் சனிக்கிழமை தமிழக துணை முதல்வா் தலைமையில் விளையாட்டு வீரா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செய்ய வேண்டும் என்றாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி