கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்தார். கழுத்து, தலை, காதுப்பகுதி, முதுகில் மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. மொத்தம் 7 இடங்களில் மருத்துவர் பாலாஜியை இளைஞர் விக்னேஷ்வரன் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.