
தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் வசதிகள் இல்லை, பாஜக மாநிலச் செயலா்
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை - திண்டுவனம் ரயில் பாதை அமைக்க மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்காததால் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரையிலான ரயில் சேவையை ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பல லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை. இதனால், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் காவல் துறை ஈடுபடவில்லை. எதிர் கருத்துக்களைக் கூறுவோரை ஒடுக்கத்தான் காவல் துறை பயன்படுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை வந்தால் தமிழகத்தின் 778 அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட 10 மடங்கு தரம் உயர்த்தப்படும் என்றார்.