மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, புகார் தெரிவிக்க பாட நூல்களின் பின்புற அட்டைகளில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (14417, 1098), பள்ளிகளில் மாணவர்கள் புகாரளிக்க ஏதுவாக 'மாணவர் மனசு புகார் பெட்டி' வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.