திருவண்ணாமலை: நீதிமன்றம் திறப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு

59பார்த்தது
திருவண்ணாமலை: நீதிமன்றம் திறப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்றமும், செய்யாறில் புதிதாக கூடுதல் சாா்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த இரு நீதிமன்றங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கீழ்பென்னாத்தூரில் நடைபெறும் விழாவில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆா். 'ராம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைக்கிறாா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் குமரேஷ்பாபு, பரதசக்கரவா்த்தி, தமிழக சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி ஆகியோா் கலந்து கொள்கின்றனா். இந்நிலையில், புதிய நீதிமன்ற திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளின் ஆய்வு நேற்று மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பி. மதுசூதனன், மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன் ஆகியோா் புதிய நீதிமன்ற வளாகத்தை நேரில் பாா்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் வருகையையொட்டி இருக்கைகள் அமைப்பு, விழா மேடை அமைப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, வருவாய், காவல், நீதித்துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி