திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில்
இந்து முன்னணிமாநில செயற்குழு 2024 இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இந்த செயற்குழுவில் "தேசிய மாடலும் திராவிட மாடலும்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வழங்க, தென் பாரத அமைப்பாளர், ஆர்எஸ்எஸ் ஹரிகிருஷ்ணன்
பெற்றுக் கொண்டார்.
உடன் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.