வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து உள்ளதால் கடந்த சில நாட்களாக வடதமிழகத்தில் பரவலான மழை பெய்து வருகிறது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, இன்றும், நாளையும் கன மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவிட்டு விட்டு பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. அதேபோல், திருவண்ணாமலையில் நேற்று பகலில் சிறிது நேரம் வெயிலும், சிறிது நேரம் மழையும்
பெய்தது. மேலும், திருவண்ணாமலையில் 13 மி. மீ. செங்கம் 6. 8மி. மீ, போளூர் 15 மி. மீ, ஜமுனாமரத்தூர் 5 மி. மீ. கலசபாக்கம் 28 மி. மீ, தண்டராம்பட்டு 212 மி. மீ. ஆரணி 33 மி. மீ. செய் யாறு 26 மி. மீ. வந்தவாசி 7மி. மீ. கீழ்பென்னாத்தூர் 15. 2 மி. மீ. வெம்பாக்கம் 6 மி. மீ. சேத்துப்பட்டு 27. 2 மி. மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, மாவட் டத்தின் சராசரியாகமழை அளவு 17. 78 மிமீ ஆகும். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.