
உடுமலை அரசு மருத்துவருக்கு சிறந்த விருது வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் கவிதா அவர்களுக்கு தமிழக அளவில் சிறந்த மருத்துவர் விருது சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார இயக்குனர் ராஜமூர்த்தி வழங்கினார். தமிழகத்தில் மொத்தம் 60 அரசு மருத்துவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.