உடுமலை நகராட்சி பகுதியில் திடீர் தீ விபத்தால் புகைமூட்டம்

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட் பகுதியில் உள்ள தபால் நிலையத்துக்கு சொந்தமான பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாமல் முட்புதர் நிறைந்து காணப்பட்டது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது செடி கொடிகள் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி