"ரஜினியை சந்தித்த பிறகு சீமானுக்கு மனமாற்றம்"

66பார்த்தது
நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு சீமானுக்கு மனமாற்றம் ஏற்பட்டது என நாதகவில் இருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பேட்டியளித்துள்ளார். சேலத்தில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஜெகதீச பாண்டியன், "எந்த நோக்கத்திற்கு கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து சீமான் விலகி பயணிக்கிறார். ரஜினியை சந்தித்த பிறகு, சங்கி என்றால் சக தோழர் என்று சீமான் கூறினார். இது எனக்கு அதிர்ச்சியளித்தது. இதை கேட்ட பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி