திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்திய 21வது திருப்பூர் புத்தகத் திருவிழா சார்பாக நடைபெற்ற போட்டிகளில் உடுமலையில் உள்ள ஆர்.கே.ஆர். குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணை ஆட்சியர் அவர்களும், காவல்துறை அதிகாரி அவர்களும் பரிசு வழங்கி சிறப்பித்தனர். இதற்கிடையில் பேச்சுப்போட்டி முதல் பரிசு பார்கவி 9பி, கவிதைப்போட்டி முதல் பரிசு நேத்ரா 11ஏ, கட்டுரைப்போட்டி மூன்றாம் பரிசு ரம்யா தேவி 11ஏ ஆகியோர் பள்ளித் தாளாளர் ஆர்.கே.ராமசாமி அவர்களிடம் இன்று வாழ்த்துப் பெற்றனர்.