திருவண்ணாமலை மாவட்டம் நெசல் கூட்ரோடு ஆரணி அருகே சாலையில் ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மணிவண்ணன் என்ற நபரை பின்னால் வந்த பள்ளி வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 29ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் சிக்கிய மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி வாகன ஓட்டுநர் சேகர் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.