தமன்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், ‘காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அவரது ரசிகர்கள், தமன்னா காதலர் விஜய் வர்மாவை பிரிந்து விட்டாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு தமன்னாவும் எவ்வித பதிலும் கூறவில்லை.