உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள
4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 94 362 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை அமைச்சர்கள் சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தனர் இன்று முதல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து உரிய இடைவெளி விட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 10, 300 மில்லியன் கன அடி மிகாமல் 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் , இதனிடையில் இன்று பிரதான கால்வாயில் 250 கனவீதமும் வரும் நாட்களில் தண்ணீர் அளவு பிரதான கால்வாயின் முழுக்கொள்ளவு ஆன 950கன அடி நீர் திறக்கபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திறக்கப்பட்ட தண்ணீரானது கடை மடை வரை செல்வதற்கு வசதியாக வாய்க்கால் பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :