திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பனிமூட்டம் காணப்படுகின்றது. இதனால் உடுமலை பொள்ளாச்சி ரோடு, பழனி சாலை மற்றும் தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் எதிர்வரும் வாகனங்களுக்கு தெரியாமல் இருப்பதால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வந்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.