உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் மகாகும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கூட்டங்களுக்கு மத்தியில் பலர் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கோவா, மாலத்தீவு போன்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருப்பதுபோல நினைத்து இளம் பெண் ஒருவர் வெறும் டவலை உடலில் சுற்றிக்கொண்டு புனித நீராடினார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.