திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிகள் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம், பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் தரப்பில் சரிசெய்ய வேண்டுமென மனுக்கள் வழங்கப்பட்டும் சரிசெய்யப்படாத நிலையில், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறியதாவது, மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.