உடுமலை: 33 வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரை துவக்கம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் இருந்து 33 ஆம் ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரை குருசாமி செந்நியப்பன் தலைமையில் இன்று துவங்கியது. 

முன்னதாக பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உட்பட சிறப்பு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மேளதாளங்கள் வழங்கப்பட்டு, பறவைக் காவடியுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையை துவக்கினர். பழனி பாதயாத்திரை விழா கமிட்டி உறுப்பினர்கள் பிரபாகரன், தங்கவேல், ஆறுமுகம், மாரிமுத்து, கனகராஜ், கண்டிமுத்து, செல்வம், பாலு, சற்குணம், மனோஜ்குமார், செல்வகுமார் மற்றும் காவடிக்குழு கமிட்டி உறுப்பினர்கள் முத்துசாமி, மாணிக்கம், பரமசிவம், தங்கராஜ், மலையப்பன், மனோஜ்குமார், பாலகுமார், தினேஷ்குமார், கார்த்திக், ஹரிகரன், மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இன்று துவங்கிய பாதயாத்திரை நாளை மதியம் பழனிக்கு சென்றடையும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி