திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அணை பகுதியில் பல இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச்சுவரை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.