திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு முற்போக்கு கிராம உதவியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகள் பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஊதிய உயர்வு 3% நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திலீப், புனிதா, பிரேமா, செல்வி, பாலமுருகன், நாகராஜ், முத்துவேல், காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.