உடுமலை திருப்பதி கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம்

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக நேற்று 29-ம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு யாகத்தை தஞ்சாவூர் சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

இந்த நிலையில் இன்று 30-ம் தேதி (வியாழக்கிழமை) யாகம் நிறைவு பெற்ற நிலையில் ஆதீனம் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் மாணவ மாணவிகளிடையே சிறப்புரை ஆற்றினார். பின்னர் சிறப்பு பூஜையில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்ட எழுது பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 23 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்

தொடர்புடைய செய்தி