திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட சீனிவாச வீதியில் சாக்கடை கால்வாய் பல இடங்களில் திறந்த வெளியில் காணப்படுகின்றது. அந்த நிலையில் வழியாக வந்த சொகுசு கார் ஒன்று திடீரென தடுமாறி கால்வாய்க்குள் புகுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே சாக்கடை கால்வாய் முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.