திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக தினமும் அமராவதி என திருமூர்த்தி அணை மற்றும் மூணாறு மறையூர் காந்தளூர் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளம் பிரிவு பகுதியில் சாலை குறுகலாக இருந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்சமயம் ரவுண்டானா அமைக்கப்பட்டு ரவுண்டானாவில் குட்டியுடன் யானை இருப்பது போன்ற சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பணிகள் ஒரு வாரத்தில் முடியும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.