திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் மகா சிவராத்திரி முன்னிட்டு பூலாங்கிணறு ஊரில் இருந்து வருடம் தோறும் பல்வேறு ஊர்கள் வழியாக கொண்டு வரப்படும் சப்பாரம் வைக்கப்பட்ட நிலையில் இன்று (ஜனவரி 29) தை அமாவாசை முன்னிட்டு சப்பாரம் இறக்கும் நிகழ்வு பூஜை செய்யப்பட்டு நடைபெற்றது. அப்போது பெண் பக்தருக்கு சாமி வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.