
உடுமலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரி பாளையம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரியத்தில் ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.