தவெக விழாவில் பத்திரிகையாளரை தாக்கிய பவுன்சர்கள்

54பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெற்று வருகிறது. விழா அரங்கிற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவன் நிலைகுலைந்தார். பத்திரிகையாளர்களை பவுன்சர்கள் ஒருமையில் பேசியதால், இருதரப்பு இடையே இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி