திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் சாலையில் குடிமங்கலம் நான்கு சாலை பகுதி உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, உடுமலை, பொள்ளாச்சி நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டன. இந்த நிலைகள் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் தற்போது வரை சிக்னல் செயல்படாமல் உள்ளது. எனவே இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.