திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய ஒன்றியம் முக்கோணம் பகுதியில் இந்து திணிப்பை எதிர்த்து தொழிலாளர் அணி மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பதாகைகள் ஏந்தி நடைபெற்றது. அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் கிளைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், பாவி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சந்திரசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், ராமசாமி, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.