உடுமலை: கருணை கொலை செய்யுங்கள்; விவசாயி பேசியதால் பரபரப்பு

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 25) விவசாயிகள் கூட்டம் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது நீராபெரியசாமி என்ற விவசாயி பேசும்போது, உடுமலை, குடிமங்கலம் பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

சில நேரங்களில் விவசாயிகளையும் தாக்கி வருவதால், துப்பாக்கி உரிமத்துடன் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை கருணைகொலை செய்யுங்கள் என பேசியதில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி