திருப்பூர் மாவட்டம் உடுமலை தேஜஸ் திருமண மண்டபத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்களுடன் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சாமி, உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.