திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் படி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு குமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வினை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் நாகராஜ் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உடுமலைநகர செயலாளர் ஹக்கீம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ருத்ரேஸ்வரன் வனிதாமணி, வழக்கறிஞர் கண்ணன் வார்டு செயலாளர்கள் சரண்யா தேவி காளிதாஸ் மினிடோர் சுப்பிரமணி ஜெயசந்திரன் சரவணன் மற்றும் சசி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.