திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இன்று மக்கள் நீதி மய்யம் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்னதானம் நிகழ்வு உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது. சுமார் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் குரு அன்னதானம் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார் மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த் , மாவட்ட நற்பணி அணி செயலாளர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் ,
நகர செயலாள கார்த்திகேயன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, மாவட்ட ஊடக அணி பிரிவு செயலாளர் பஷீர் மற்றும் மக்கள் நீதி மையம் உறுப்பினர்கள் மணிகண்ட பிரபு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.