திருப்பூர் மாவட்டம் உடுமலை நியூ ராயல்ஸ் அரிமா சங்கத்தின் மூலமாக பழனி திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் நன்மைக்காகவும் உடல் ஊனமுற்றோரின் தேவைக்காகவும் கண் பார்வையற்றோரின் அவசியம் பணிக்காகவும் 65 ஆயிரம் மதிப்புள்ள 10 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. தலைவர் யோகானந்தம், செயலாளர்கள் கணேசன், சுந்தர்ராஜ், பொருளாளர் கணேஷ் மற்றும் கோவில் இணை ஆணையர், கோவில் ஆய்வாளர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.