
திருப்பூர்: பணம் திருடிய தொழிலாளி கைது
திருப்பூர்- காங்கயம் சாலை நல்லூர் முதலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பல்லடம் சாலை பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுப்பிரமணியென்பவர் முதியவரிடம் பேச்சு கொடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபாயை திடீரென்று எடுத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். உடனடியாக முதியவர் சத்தம் போட்டுள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் சுப்பிரமணியை பிடித்து தர்மஅடி கொடுத்து நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். நல்லூர் போலீசார், அவரை கைது செய்தனர்.