எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில்
ரம்ஜான் பண்டிகையையொட்டி சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதி எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை திருப்பூர் காங்கேயம் சாலையில் எச். எம். எஸ். திருமண மண்டபத்தில் தெற்கு தொகுதி தலைவர் அன்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு முன்னாள் எம். எல், ஏ. , சு. குணசேகரன், எஸ். டி. பி. ஐ. கட்சி மாநில பொருளாளர் ஏ. முஸ்தபா, சமூக செயல்பாட்டாளர் சத்தியபிரபு செல்வராஜ், எஸ். டி. பி. ஐ. கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்து பேசினார்கள். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டா பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர் என 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி, பழவகைகள், தண்ணீர் பாட்டில், பழச்சாறு, பிரியாணி வழங்கப்பட்டது.
முன்னதாக எஸ். டி. பி. ஐ. , தெற்கு தொகுதி துணை தலைவர் ஷேக் அலாவுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். தெற்கு தொகுதி அமைப்பு செயலாளர் எஸ். இர்பான் தொகுப்புரை வழங்கினார்.