உடுமலை: மயங்கி விழுந்து தொழிலாளி பலி

59பார்த்தது
உடுமலையை அடுத்த தேவனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). பஞ்சுமில் ஆப்ரேட்டர். திருப்பூர் கிழக்கு பொம்மநாயக்கன்பாளையத்தில் குடியிருந்து வந்தார். அவர் போயம்பாளையத்தை அடுத்த அபிராமி தியேட்டர் சாலையில் உள்ள ஒரு மருந்துக்கடைக்கு நேற்று முன்தினம் மருந்து வாங்க வந்தார். பின்னர் கடையில் மாத்திரை வாங்கிக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரமேஷ்குமாரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரமேஷ்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி மருந்துக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி