திருப்பூர்: போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை

74பார்த்தது
திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த சக்திநகர் 3-வது வீதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 27-ம் தேதி மாலை சக்திநகரில் அரசு பள்ளி வீதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் முன்பு நிறுத்தப்பட்டி ருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது மர்ம ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து நைசாக வாகனத்தை திருடி சென்ற காட்சி பதி வாகி இருந்தது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது போயம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக அடையா ளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரிய வந் துள்ளது. அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப டுத்த வேண்டும் என்றும், திருட்டு மற்றும் குற்ற சம்பவங் களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஈ. பி. சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி