திருப்பூரில் அந்த தியாகி யார்? சுவரொட்டியால் பரபரப்பு

63பார்த்தது
திருப்பூர் மாநகரில் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், அவினாசி ரோடு, குமரன் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுவர்களில் அ. தி. மு. க. சார்பில் டாஸ் மாக் ஊழல் என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் 'பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ. 1, 000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் ரூ. 40 ஆயி ரம் கோடி, ரூ. 1, 000 கொடுப்பது போல கொடுத்து ரூ. 1, 000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? " என குறிப்பிட்டு அ. தி. மு. க. திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் என்ற வாசகங் களுடன் இடம்பெற்று இருந்தன. மாநகரின் பல பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற் பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி