நெட்ப்ளிக்ஸில் வெளியான 'ஸ்குவிட் கேம்' மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருப்பவர் 80 வயது தென்கொரிய நடிகர் ஓ இயோங்-சு. ஆனால், தனது 80 ஆண்டு வாழ்க்கையில் சேர்த்த நல்ல பெயர், ஒரே கணத்தில் பாழாகிவிட்டதாக இவர் புலம்புகிறார். காரணம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டு வன்கொடுமை செய்த வழக்கில், அந்நாட்டு கோர்ட் இவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.