கடையில் வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்

67பார்த்தது
திருப்பூர் பஸ் நிலைய கடையில் வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்



திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் நேற்று முன்தினம் தனது மகனுடன் வந்த பெண் ஒருவர் மகனுக்கு செல்போன் எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண் டும் என கூறினார். இதனை தொடர்ந்து கடையில் இருந்த ஊழியர்கள் செல்போன்களை எடுத்து காட்டினர். மேலும் தனது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டும் என செல்போனை கொடுத்துள்ளார். அதனை எடுத்துச் சென்று டெம்பர் கிளாஸ் ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடு பட்ட போது மகனுக்கு எடுத்துக்காட்டிய ரூ. 10 ஆயிரம் மதிப் புள்ள செல்போனை எடுத்து அவரது பேக்கில் போட்டுக் கொண்டு டெம்பர் கிளாஸ் மாற்றுவதற்கான பணத்தை மட் டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து செல்போன் காணவில்லை என ஊழி யர்கள் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது அந்த பெண் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. தற்போது அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி