திருப்பூர்: 10 ம் வகுப்பு தேர்வு. மாவட்டத்தில் 31332 மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் 348 பள்ளிகளில் பயிலும் 15087 மாணவர்களும், 15148 மாணவியர்களும் , 1097 தனித்தேர்வர்கள் என 31332 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதுகின்றனர். தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக 108 தலைமை ஆசிரியர்கள், 108 துறை அலுவலர்கள், 1700 அறை கண்காணிப்பாளர்கள், மற்றும் 165 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் கே. எஸ். சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் தேர்வை பார்வையிட்டு தேர்வை சிறப்பான முறையில் நடத்த அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களும் அச்சமின்றி தேர்வெழுதி வெற்றி பெற வாழ்ததுக்களை தெரிவித்தார்