எல். ஆர். ஜி. அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

79பார்த்தது
திருப்பூர் எல். ஆர். ஜி. மகளிர் கலைக்கல்லூரியில் பட்டம ளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் தமிழ்மலர் தலைமை தாங்கி னார். விழாவில் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல் லூரி முதல்வர் கீதா கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட் டங்களை வழங்கி பேசியதாவது: -
சிறப்பானதொரு குடும்பத்தை, சமுதாயத்தை உருவாக்க கூடியவர்கள் நீங்கள். இந்தியாவின் எதிர்காலமும் நீங்கள் தான். உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய செல்வம் கல் வியே. உங்களிடமிருந்து வாழ்நாள் முழுவதும் பிரிக்க முடி யாத, எடுக்க முடியாத, குறையாத செல்வம் கல்வியே. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தீமைகளை, குறைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை, தைரியத்தை தரக்கூடியது கல்வி. குடும்பம் மற்றும் சமுதாயத்தில் கவனம் கொள்ளும் நீங்கள் உங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கப்பதக்கம்
விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றனர். இவர்களில் இள ங்கலை பிரிவில் 21 மாணவிகள், முதுகலை பிரிவில் 14 மாணவியர் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதோடு, 6 மாணவியர் முதலிடம் பெற்று தங்கப்ப தக்கமும் வென்றுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி